கற்பனையும் உண்மை நிலையும்
உண்மை நிலை: பாலியல் கொடுமைக்குப் பலியாகுபவர்கள் எந்த சமூக-பொருளாதாரப் பிரிவு, பாலினம் மற்றும் மதத்தைச் சார்ந்தவராகவும் இருக்கலாம்.
உண்மை நிலை: பாலியல் கொடுமை செய்யும் பெரும்பாலோர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறிமுகமானவர்களாகவே இருக்கிறார்கள் (எ.கா: பெற்றோர், உடன்பிறந்தோர், நண்பர், உறவினர், அண்டைவீட்டார், ஆசிரியர், இன்னும் பல)
கற்பனை: சிறார் பாலியல் கொடுமையில் பெரும்பாலும் வன்முறைகள் இருக்கும்.
உண்மை நிலை: பெரும்பாலும் இதில் வன்முறை இருப்பதில்லை. குற்றம் புரிந்த பெரும்பாலோர் சிறாரைக் கட்டாயப்படுத்துவதற்குப் பதிலாக வசப்படுத்துதல், லஞ்சம் கொடுத்தல், மிரட்டுதல் போன்ற முறைகளைக் கையாளுகிறார்கள். அல்லது நடந்தனவற்றை வெளியே சொன்னால் யாரும் நம்பமாட்டார்கள் என்று சிறாரை நம்ப வைக்கிறார்கள். வயதில் முதிர்ந்தவர்கள் கூறுவதை எதிர்த்துப் பேசாமல் ஏற்க வேண்டும் என்று சிறார்களுக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால் அவர்கள் பாலியல் வன்முறைக்கு எளிதில் ஆளாகிறார்கள்.
கற்பனை: பாலியல் வன்முறை தொடர்பாக சிறார் பொய் சொல்கிறார் அல்லது அவ்வாறு நடந்ததாகக் கற்பனை செய்துகொள்கிறார்.
உண்மை நிலை: இது போன்ற விஷயங்களில் சிறார் பொய் சொல்வது மிக அரிது. பீதி, அசௌகரியம், அல்லது குடும்ப அழுத்தங்களினால் அவர்கள் பின்வாங்குவர் அல்லது எல்லாவற்றையும் வெளிச்சொல்லமாட்டார்கள்.
கற்பனை: சிறாரைப் பாலியல் தாக்குதல் செய்வோர் பெரும்பாலும் ஓரினச் சேர்க்கையாளர் ஆவர்.
உண்மை நிலை: பாலியல் தாக்குதல் செய்யும் பெரும்பாலோர் தங்களை இயல்பான பாலுணர்வு கொண்டவர் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றனர்.
கற்பனை: ஊடுறுவல் இல்லை என்றால், வேறு எதுவும் பெரிதாக நடக்கவில்லை என்று அர்த்தம்.
உண்மை நிலை: முழுமையான பாலியல் தாக்குதல் போன்றே முழுமையற்ற பாலியல் தாக்குதலும் அதிர்ச்சிகரமான ஒன்றாக இருக்கும். இந்நிலைக்கு ஆளான சிறார் ஆற்றாமை, இழிநிலை, ஆத்திரம், அவமானம் மற்றும் குழப்பத்திற்கு உள்ளாவர்.
கற்பனை: குற்றம் புரிந்தவர் மறுபடியும் அவ்வாறு செய்யமாட்டேன் என்று கூறினால் நாம் அவரை நம்பலாம்.
உண்மை நிலை: குற்றம் இழைத்தவருக்கு யாராவது வழிகாட்ட வேண்டும். இல்லாவிடில் அவர் தன் செய்கையை நிறுத்தமாட்டார். குடும்ப உறுப்பினர்களை பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கும் ஒருவர், தன்னுடைய குற்றத்தை குடும்பத்தோடு நிறுத்திக்கொள்வார். ஆனால் சிலர் குடும்பத்திற்கு வெளியே பாலியல் வன்முறையைத் தொடர்வர். துறைசார் ஆலோசகர்களின் உதவியைப் பெறுவதற்கு அவர்களைக் கட்டாயப்படுத்த வேண்டும்.
கற்பனை: “அவ்வாறு” ஏதாவது நடந்திருக்கிறது என்றால், நிச்சயம் தாய்மார்களுக்குத் தெரிந்திருக்கும்.
உண்மை நிலை: பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமையை துளியும் அறிவதில்லை. பாலியல் கொடுமை வெளித்தெரிந்த பிறகே அவர்கள் தங்களை நொந்துகொள்கிறார்கள். தன் குழந்தை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படுகிறது என்று அறிந்திருக்கும் சில தாய்மார்கள், அந்தப் பாலியல் துன்புறுத்தலை மேற்கொள்ளும் தங்களுடைய கணவனுக்குப் பயந்து அதனை வெளிச்சொல்வதில்லை.
சிறார் பாலியல் கொடுமை தொடர்பான புத்தகங்கள், சுவரொட்டிகள் மற்றும் துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.
