பாலியல் தொந்தரவு என்றால் என்ன?
பாலியல் தொந்தரவு என்பது வாய்மொழியாக, வாய்மொழியற்ற, காட்சி வடிவில், உளவியல் அல்லது உடல் ரீதியான, எந்தவொரு விரும்பத்தகாத பாலியல் நடத்தைகள் ஆகும்.
அவமதிக்கும், அச்சுறுத்தும், விரோதமான, கற்றல், பணியாற்றும் மற்றும் வாழும் சூழலை, பாலியல் தொந்தரவுகள் உருவாக்குகின்றன. சாலைகளில், பொது இடங்களில், பொதுப் போக்குவரத்துகளில், பல்கலைக்கழகளில் பாதிக்கப்பட்டவர்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் அதிகம் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாவது பணி புரியும் இடங்களில்தான்.
பெண்களும் ஆண்களும் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகலாம் அல்லது அவர்கள் மற்றவர்களுக்குப் பாலியல் தொந்தரவு கொடுக்கலாம். பாலியல் தொந்தரவு ஒரே பாலினத்திலும் அல்லது வெவ்வேறு பாலினங்களிலும் நடக்கலாம். ஒரே சமுதாய அந்தஸ்து அல்லது வெவ்வேறு சமுதாய அந்தஸ்து கொண்டவர்களிடையேயும் அது நிகழலாம்.
ஒரு நடத்தை ஒருவருக்கு அசௌகரியத்தையும் அச்சுறுத்தலையும் உண்டாக்கும் பட்சத்தில் அது பாலியல் தொந்தரவாக இருக்கக்கூடும் என்பதுவே பாலியல் தொந்தரவுக்கான அடிப்படை விதி. பாலியல் தொந்தரவு கொடுப்பவரின் நோக்கம் எதுவாக இருந்தாலும், அது பாதிக்கப்பட்டவரின் பார்வையைக் கொண்டே அறியப்பட வேண்டும்.
பாலியல் தொந்தரவுகளின் வகைகள்
பாலியல் தொந்தரவுகள் பல வடிவங்களில் நிகழலாம். அவை வருமாறு:-
உடல் ரீதியாக
- விரும்பத்தகாத, ஒவ்வாத தொடுதல், தழுவுதல் மற்றும் தடவுதல்
- ஒருவரின் உடல் மீது அழுத்துதல் அல்லது உரசுதல்
- வேண்டுமென்றே நெருக்கமாக நிற்றல்
வாய்மொழியாக
- ஒருவரைப் பொருத்தமற்ற முறையில் அழைத்தல், உதாரணத்திற்கு: “செக்சி, “பேபி” அல்லது “டார்லிங்”
- ஆபாச கேலிப் பேச்சுகள்/பொது இடங்களில் ஒருவரை நோக்கி ஆபாச வார்த்தைகளை உரக்க உச்சரித்தல்
- ஒருவரின் பாலியல் தொடர்பு பற்றிய வாழ்க்கைக் கதை மற்றும் கற்பனை இன்பங்களைப் பற்றிப் பேசுதல்
- ஒருவரின் உடல் பற்றி ஒவ்வாத கருத்துகள் மற்றும் விமர்சனங்களை வெளியிடுதல்
- ஒவ்வாத பாலியல் தகவல்கள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புதல்
- பாலியல் நடவடிக்கைகளைக் குறிக்கும் சைகையைக் காட்டுதல்
- தொடர்ச்சியாகக் குலாவுதல்
- ஒருவரைப் பொருத்தமற்ற முறையில் அழைத்தல், உதாரணத்திற்கு: “செக்சி, “பேபி” அல்லது “டார்லிங்”
- ஆபாச கேலிப் பேச்சுகள்/பொது இடங்களில் ஒருவரை நோக்கி ஆபாச வார்த்தைகளை உரக்க உச்சரித்தல்
- ஒருவரின் பாலியல் தொடர்பு பற்றிய வாழ்க்கைக் கதை மற்றும் கற்பனை இன்பங்களைப் பற்றிப் பேசுதல்
- ஒருவரின் உடல் பற்றி ஒவ்வாத கருத்துகள் மற்றும் விமர்சனங்களை வெளியிடுதல்
உளவியல்
- தனக்கு விருப்பமில்லாத சமூக நிகழ்வுகளுக்கு வருமாறு நச்சரித்தல்
- மனமொத்த சந்திப்புகளுக்கு அல்லது உடல் நெருக்கம் வேண்டி நச்சரித்தல்
இணையவழி பாலியல் தொந்தரவுகள்
பாலியல் தொந்தரவுகள் எந்தவொரு இணையத் தளங்கள் மூலமாகவும் நிகழலாம். உதாரணத்திற்கு:
- ஒவ்வாத பாலியல் தகவல்கள், படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புதல்
- ஒருவரின் சம்மதம் இல்லாமல் அவருடைய ஆபாசப் படங்கள் மற்றும் காணொளிகளை அனுப்புதல், பகிர்தல் அல்லது பதிவு செய்தல்
- ஆள்மாறாட்டம் செய்து பாலியல் தகவல்களைப் பகிர்ந்து, அல்லது பாலியல் தொந்தரவு கொடுத்து நிஜ நபரின் மதிப்பைக் கெடுத்தல்
- ஒருவர் சமூக ஊடகங்களில் பதிவு செய்தனவற்றுக்குப் பாலியல் ரீதியான விமர்சனங்களை முன்வைத்தல்
- ஒருவரைப் பற்றிய பாலியல் தகவல்களைக் கொடுக்குமாறு அல்லது பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு மிரட்டுதல் அல்லது நச்சரித்தல்
பாலியல் தொந்தரவுகளால் ஏற்படும் பாதிப்புகள்
பாலியல் தொந்தரவுகளினால் விளையும் பாதிப்புகள் ஆழமாகவும் நாசத்தை உண்டாக்குவதாகவும் இருக்கும். பாதிக்கப்பட்டவர், குறுகிய மற்றும் நீண்ட காலகட்டத்திற்கு அதன் தாக்கங்களால் அவதியுறக்கூடும். பாலியல் தொந்தரவுகள் கொண்டு வரும் பாதிப்புகள் வருமாறு:-
- அதிகரிக்கும் மன அழுத்தம்
- தலைவலி மற்றும் சோர்வு
- தூக்கத்தில் மற்றும் உணவு உட்கொள்ளுதலில் பிரச்சனைகள்
- குழப்பம் மற்றும் கையறு நிலை
- தலைக்குனிவு, தன்னையே நொந்துகொள்ளுதல் மற்றும் குற்றவுணர்ச்சி
- அவமானங்கள் மற்றும் சங்கடங்கள்
- ஆத்திரம் மற்றும் பயம்
- மனச்சோர்வு மற்றும் மனக்கவலை
- அச்சநோய் மற்றும் பதட்டத்தில் எதிர்வினையாற்றுதல்
- தற்கொலை எண்ணம் அல்லது முயற்சி
- சுயமதிப்பு மற்றும் தன்னம்பிக்கை குறைதல்
- பணி நீக்கம் செய்யப்படுதல் அல்லது வேலையிலிருந்து விலகுதல்
- வேலை செயல்திறன் குன்றிப்போதல்
- வேலைக்கு மட்டம் போடுதல்
- தொழிலில் மனநிறைவு குறைதல்
பாலியல் தொந்தரவு தொடர்பான துண்டுப்பிரசுரங்கள் மற்றும் வீடியோக்களைக் காணவும்.
