பதின்மரும் வன்முறையும்

பதின்மரின் வளர்ச்சியில் நட்பு ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. குடும்ப உறுப்பினர்களைத் தவிர்த்து, நண்பர்களுடனான உறவு, ஓர் அணுக்கத்தையும் தாமும் மதிக்கப்படுகின்றோம் என்ற உணர்வையும் கொடுக்கின்றது. இது, தன்னம்பிக்கை மற்றும் பாதுகாப்பு உணர்வை அளிக்கிறது. இந்தக் காலக்கட்டத்தில், பதின்மர்களுக்கு ஒருவரின் பால் ஈர்ப்பு ஏற்படுவதும் அவர்களோடு அணுக்கமான தொடர்பில் இருப்பதும் வழக்கமாக நிகழும் ஒன்றே. இந்தத் தொடர்புகளை வலுப்படுத்திக்கொள்வதற்காக, நீங்கள் உங்களுக்கான பிரத்தியேக நேரத்தை ஒதுக்கி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளவும் முடிவெடுக்கலாம்.

ஆகையால், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு ஆரோக்கியமான உறவினை வளர்த்துக்கொள்வது முக்கியமாகும்.

ஆரோக்கியமான உறவு என்றால் என்ன?

ஆரோக்கியமான உறவில், உங்கள் நண்பன்/தோழி:

  • ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கை வைத்து ஆதரவாக இருப்பர்;
  • பரஸ்பரம் மதிப்பு கொடுத்து, அவரவர் கருத்துகளுக்கும் மதிப்பளிப்பர்;
  • மகிழ்ந்திருப்பர் மற்றும் முடிவுகளை சேர்ந்து எடுப்பர்;
  • ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்வர்;
  • விவாதங்களை வெளிப்படையாகவும் நேர்மையாகவும் களைவர்;
  • ஒருவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு மற்றும் எல்லைகளுக்குப் பரஸ்பர மரியாதை கொடுத்து நடந்துகொள்வர்.

ஆரோக்கியமற்ற உறவு என்றால் என்ன?

ஒன்றாக இருக்கும்பொழுது நீங்கள் இருவரும் அல்லது யாராவது ஒருவர் உங்கள் சுயத்தைச் சுதந்திரமாக வெளிப்படுத்தமுடியாவிடில், அது ஆரோக்கியமற்ற உறவு. அசௌகரியமாக உணரும் செயல்களை மேற்கொள்ள நிர்ப்பந்தப்படுத்தப்பட்டால் அல்லது இருவரும் தங்களின் மிக மோசமான குணங்களை வெளிப்படுத்தும் சூழல் உருவானால், அது ஆரோக்கியமற்ற உறவே. பொதுவாக, அவமதித்தல் மற்றும் அடக்குதல் போன்றவையே ஆரோக்கியமற்ற உறவுகளின் ஆளுமை அம்சங்களாக உள்ளன.

ஆரோக்கியமற்ற உறவின் அபாய அறிகுறிகள்

  • அடிக்கடி தொலைபேசியில் அழைத்தல் அல்லது குறுஞ்செய்தி அனுப்புதல். பரிசுப் பொருட்களை வாரி வழங்குதல் மற்றும் அபரிமிதமான புகழ்ச்சி வார்த்தைகள். உதாரணத்திற்கு, ‘உங்களைப் போன்றொரு சிறந்தவரை இது வரை நான் கண்டதில்லை’ என்று கூறுதல். ஆனால், நீங்கள் அவருடனான உறவை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகு இந்தப் புகழ்ச்சி வார்த்தைகள் எல்லாம் நின்றுபோய்விடும். இது காதல் வலை வீச்சு என்று என்றறியப்படுகிறது.
  • நீங்கள் எப்பொழுதும் ஒரு நிலையற்ற ஒரு சூழ்நிலைக்குத் தள்ளப்படுவது மற்றும் ஒருவரோடொருவர் நேரத்தைச் செலவழித்த பின்பு எதிர்மறை உணர்வுகளுக்கு ஆளாகவும் கூடும். தன்னைப் பற்றி அவர் உங்களிடம் முழுமையாகப் பகிர்ந்து கொள்ள மாட்டார். உங்களை வசப்படுத்தி வைத்துக்கொள்ளும் அளவுக்கு மட்டுமே அவரின் அணுகுமுறை இருக்கும். இதனைக் காதல் வசியம் என்றும் அழைக்கலாம்.
 

ஆரோக்கியற்ற உறவுகளின் வகைகள்

ஆரோக்கியற்ற உறவுகள் இரண்டு வகைப்படும்: அவை நச்சு உறவு மற்றும் வன்முறை உறவு. ஆனால், நச்சு உறவுக்கும் வன்முறை உறவுக்குமிடையில் ஒரு தெளிவான எல்லைக்கோடு கிடையாது. இரு வகை உறவுகளுமே ஆரோக்கியமற்ற மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதவை. அவை சம்பந்தப்பட்டவருக்கு மன அதிர்வை ஏற்படுத்தி நீண்ட கால சேதத்தையும் விளைவிக்கக்கூடும்.

நச்சு உறவு

இருவரும் அல்லது யாராவது ஒருவர் திறம்பட உறவு தொடர்புகொள்ள முடியாத பொழுது மற்றும் ஒரு சூழலில் அல்லது கருத்து வேறுபாடுகளின் பொழுது கட்டுப்பாட்டை இழந்து எதிர்மறை வினையாற்றுவது நச்சு உறவு ஆகும்.

  • தனிமனித எல்லைகளை அலட்சியப்படுத்தி ஒருவரையொருவர் அல்லது ஒருவர் இன்னொருவரை மோசமான உணர்வுகளுக்கு ஆளாக்குதல்.
  • ஒவ்வொரு கருத்து வேறுபாடும் விவாதத்தில் முடிந்து, ஒருவரையொருவர் அல்லது ஒருவர் இன்னொருவரை தாழ்த்திப் பேசுதல்.
  • ஒருவரையொருவர் அல்லது ஒருவர் இன்னொருவரை நோட்டம் பார்த்தல் அல்லது சிறு விஷயங்களுக்கெல்லாம் குறை கண்டுபிடித்தல்.
  • ஒரு காரியம் எதிர்பார்த்தவாறு நடக்கவில்லை என்றால் ஒருவரையொருவர் அல்லது ஒருவர் இன்னொருவர் மீது பலி சுமத்துதல்.
  • எதிர்பார்ப்புகள் நிறைவேறாத பட்சத்தில், காரியத்தைச் சாதித்துக்கொள்ள ஒருவரோடொருவர் அல்லது ஒருவர் இன்னொருவரிடம் வேண்டுமென்றே பேசாமல் இருத்தல்.
 

வன்முறை உறவு

வன்முறை உறவில் ஒருவர் இன்னொருவர் மீது ஆதிக்கம் செலுத்தி, தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதைத் தெளிவாகக் காண முடியும்.

  • மற்றவரின் உணர்ச்சிகள், எண்ணங்கள் மற்றும் நடவடிக்கைகளை வேண்டுமென்றே சிறுமைப்படுத்துதல்.
  • ஒருவரின் உணர்வு மற்றும் சூழ்நிலைப் புரிதலை சூழ்ச்சித் திறத்துடன் கையாளுதல் மற்றும் நிராகரித்தல்.
  • தன் சொந்த மதிப்பீடுகள், கருத்துகள் மற்றும் வழிமுறைகளை இன்னொருவர் மீது திணித்தல்.
  • அச்சுறுத்துதல் மற்றும் உணர்வு ரீதியாக மிரட்டுதல்.
  • ஒருவரை அடக்குவதற்காக உடல் மற்றும் மன ரீதியான வன்முறையைப் பயன்படுத்துதல்.
  • ஒருவரைப் பின்தொடர்ந்து, அவர் எங்கிருக்கிறார், அவரின் கைப்பேசி தொடர்புப் பதிவுகள் மற்றும் குறுஞ்செய்திகளை நோட்டமிடுதல்.
  • ஒருவர் இன்னொருவரை, அவரின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து தனிமைப்படுத்துதல்.

 

ஆரோக்கியமற்ற உறவுகளினால் ஏற்படும் பாதிப்புகள்

ஆரோக்கியமற்ற உறவில் இருக்கும் ஒருவருக்கு அது சேதங்களை ஏற்படுத்தும். அதன் பாதிப்புகளில் சில வருமாறு:

உடல்

  • மன அழுத்தம் அதிகரித்தல்
  • சோர்வு மற்றும் தூக்கமின்மை
  • குமட்டல் மற்றும் மன இறுக்கத் தலைவலி
  • காயங்கள்
  • பால்வினை நோய்கள்
  • போதைப்பொருள் உபயோகம்
  • கருவுற்றல்
மனம்
  • பயம்
  • நிர்க்கதி நிலை
  • சுயமதிப்பு குன்றிப்போதல்
  • பதற்றம் மற்றும் மனச்சோர்வு
  • தனிமைப்படுத்திக்கொள்ளுதல்
  • தன்னை எதிர்மறையாக வெளிப்படுத்துதல்
  • அவமானம் மற்றும் சங்கடம்
சமூகம்
  • கல்வியில் தேக்கம்
  • பாதுகாப்பற்ற உணர்வினால் பள்ளிக்குச் சரியாகப் போகாமல இருத்தல்
  • அடுத்தவரை நம்புவதில் மற்றும் அர்த்தமுள்ள உறவினை வளர்த்துக்கொள்வதில் சிரமத்தை எதிர்நோக்குதல்
பதின்மர் &நேச சந்திப்பு வன்முறை தொடர்பான பயனான தகவல்களைக் காணவும்.